Tuesday, December 24, 2024
HomeLatest Newsகோலாகலமாக கொண்டாடப்பட்ட சுதந்திர தினம்..!அமெரிக்காவில் திரண்ட மக்கள்..!

கோலாகலமாக கொண்டாடப்பட்ட சுதந்திர தினம்..!அமெரிக்காவில் திரண்ட மக்கள்..!

அமெரிக்காவின் 247 ஆவது சுதந்திர தினமானது மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது.

அந்த வகையில், தலைநகர் வாஷிங்டனில் உள்ள நேஷனல் மாலில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததுள்ளனர்.

லிங்கன் நினைவிடத்தில் உள்ள குளத்தின் இருபுறமும் 17 நிமிடங்கள் வன வேடிக்கை நிகழ்த்தப்பட்டுள்ளதுடன், அதனை மக்கள் கண்டு கழித்துள்ளனர்.

அது மட்டுமன்றி, சிகாகோ நகரில் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும்,
சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அந்நகர மக்கள் பல்வேறு வகையான பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்துள்ளனர்.

மேலும், இரண்டாம் கான்டினென்டல் காங்கிரஸின் சுதந்திரப் பிரகடனத்தை ஜூலை 4, 1776 அன்று ஒருமனதாக ஏற்றுக்கொண்டதையும், தாங்கள் ஒன்றுபட்ட, சுதந்திரமான அரசுகள் என்று பிரகடனப்படுத்தியதையும் நினைவு கூறும் வகையிலும் ஜூலை 4 ஆம் திகதி அமெரிக்காவின் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News