Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsகாசா குறித்து நம்பமுடியாத தகவல்!!!

காசா குறித்து நம்பமுடியாத தகவல்!!!

இஸ்ரேல் இராணுவ தாக்குதல்களால் காசாவில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற 100 டிரக்குகளை பயன்படுத்தினால், அதற்கு 14 ஆண்டுகள் ஆகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி பெர் லோதம்மர் கூறியுள்ளார்.இஸ்ரேல்-ஹமாஸ் போரின் விளைவாக காசா பகுதியில் 37 மில்லியன் மெட்ரிக் டன் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.

இதில், வெடிக்காத குண்டுகள், வெடிமருந்து உறைகள் மற்றும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களால் அழிக்கப்பட்ட கட்டடங்களின் குப்பைகள் உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.மேலும் இஸ்ரேலிய இராணுவ தாக்குதல்களால் 34,305 பாலஸ்தீனியர்கள் இறந்ததாகவும் 77,293 பேர் காயமடைந்ததாகவும் பெர் லோதம்மர் தெரிவித்துள்ளார்.

Recent News