தக்காளி விலை அதிகரித்து அவரும் சுழலில் அதனை பாதுகாப்பதற்காக வியாபாரி ஒருவர் பாதுகாவலர்களை நியமித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரனாசியை சேர்ந்த காய்கறி வியாபாரியான அஜய் என்பவரே இவ்வாறு பாதுகாவலர்களை நியமித்துள்ளார்.
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் தக்காளியின் விலையானது வரத்து குறைவு, விளைச்சல் பாதிப்பு மற்றும் மழை காரணமாக அதிகரித்திருப்பதாக கூறப்படுகின்றது.
இதற்கிடையில், தக்காளிகள் கடையிலும், வயல் வெளிகளிலும் திருட்டு போகும் சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்கின்றன.
இவ்வாறான சூழலிலே, வியாபாரி அஜய் தக்காளியை பாதுகாக்கும் நோக்கில் கடையின் முன்பகுதியில் இரு பாதுகாவலர்களை நிறுத்தியுள்ளார்.
இது தொணடர்பாக அஜய் தெரிவிக்கையில், தக்காளியின் விலை அதிகரித்து வருவதால் , ஒரு கிலோ 160 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், சிலர் 50 கிராம் மற்றும் 100 கிறா அளவிற்கும் தக்காளியை தருமாறு கேட்கின்றனர்.
அத்துடன், சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், திருட்டு சம்பவம் நிகழ்கின்றது இதனால் பாதுகாவலர்களை நியமித்துள்ளதாக விளக்கமளித்துள்ளார்.