Thursday, January 23, 2025

சீனாவில் அதிகரிக்கும் வெப்ப அலை…!வேலைகளை நிறுத்தி வையுங்கள்..!அரசின் அதிரடி உத்தரவு..!

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் வெப்ப அலை அதிகரித்து வரும் காரணத்தால் வெயிலில் பணிபுரியும் அனைத்து வேலைகளையும் நிறுத்தி வைக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதாவது, அந்த நாட்டில் தெற்கு பகுதியில் மழை மற்றும் வெள்ளமானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில் மாறாக வடக்குப் பகுதியில் கடும் வெப்ப அலை வீசி வருகின்றது.

அந்த வகையில், பெய்ஜிங்கில் 1961 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த ஆண்டு தொடர்ந்து பத்து நாட்களிற்கு மேலாக 35 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகியுள்ளது.

இனி வரும் நாட்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸிற்கு உயர்வடையும் என கூறப்பட்டுள்ளது.

அதனால், பெய்ஜிங்கில் அதிகளவான வெப்ப அலைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன்
மக்களை வீடுகளிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், இந்த மாதம் சீன பல்வேறு இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Videos