Friday, November 15, 2024
HomeLatest Newsஇலங்கையில் ஆங்கில மொழிக் கல்விக்கான தேவை அதிகரிப்பு!

இலங்கையில் ஆங்கில மொழிக் கல்விக்கான தேவை அதிகரிப்பு!

இலங்கையில் ஆங்கில மொழிக் கல்வி மற்றும் தனியார் கல்விக்கான தேவை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் கல்வி அமைப்பான யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

உலகில் மற்ற எந்தப் பிராந்தியத்தையும் விட தெற்காசியாவில் தனியார் கல்வி வேகமாக வளர்ந்துள்ளதாக அறிக்கை கண்டறிந்துள்ளது.

இலங்கையில், 1995 மற்றும் 2016 க்கு இடையில் தனியார் கல்விக்காக செலவிடும் குடும்பங்களின் சதவீதம் நகர்ப்புற குடும்பங்கள் மத்தியில் 41வீதத்தில் இருந்து 65 வீதமாகவும்; கிராமப்புற குடும்பங்களில் 19 வீதத்தில் இருந்து 62 வீதமாகவும் அதிகரித்துள்ளது.

அறிக்கையின்படி, இலங்கையில், பட்டதாரிகளின் ஆங்கில மொழித் திறனில் அரச சார்பற்ற நிறுவனங்கள் கவனம் செலுத்துவது, பொது நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் ஒரு நன்மையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இலங்கையில், சுமார் 71வீத பாலர் பாடசாலைகள் தனியார் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன.

7வீதமானவை மத நிறுவனங்களாலும், 3வீதமானவை அரச சார்பற்ற நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன.

அதேநேரம் 20வீதம் மட்டுமே அரச நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன.

இதன்படி தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள அனைத்து கல்வி நிலைகளிலும் அரசு சாராத அமைப்புக்கள் செல்வாக்கு பெற்றுள்ளன.

குழந்தை பருவத்தில், தனியார் துறை பெரும்பாலும் முக்கிய கல்வி வழங்குநராக உள்ளது, உதாரணமாக ஈரானின் இஸ்லாமிய குடியரசில் 93வீத குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது.

நேபாளத்தில் நான்கில் ஒரு பங்கு மாணவர்களுக்கும், பாகிஸ்தானில் மூன்றில் ஒரு பகுதிக்கும், இந்தியாவில் பாதிக்கு மேல் மாணவர்களுக்கும் கல்வி கற்பிக்கின்றன.

2014 முதல் இந்தியாவில் நிறுவப்பட்ட அனைத்து புதிய பாடசாலைகளில் 10 இல் 7 பாடசாலைகள், தனியார் பாடசாலைகளாகும் என்றும் யுனெஸ்கோ குறிப்பிட்டுள்ளது.

Recent News