Tuesday, December 24, 2024
HomeLatest Newsஇலங்கை காவல்துறையினருக்கு எதிராக அதிகரித்து வரும் முறைப்பாடுகள்..! வெளியான தகவல்

இலங்கை காவல்துறையினருக்கு எதிராக அதிகரித்து வரும் முறைப்பாடுகள்..! வெளியான தகவல்

கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை காவல்துறையினருக்கு எதிராக தேசிய காவல்துறை ஆணைக்குழுவில்,  9295 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த முறைப்பாடுகளில் சட்டவிரோத கைது, பொய் வழக்குகள், தாக்குதல், சித்திரவதை, பாரபட்சம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் காவல்துறையின் செயலற்ற தன்மை ஆகியவை அடங்குகின்றன.

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி, இந்த முறைப்பாடுகள், தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, 2015 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2018 ஆம் ஆண்டில் தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கான பாதீடு ஒதுக்கீடு அதிகரித்துள்ளது.

எனினும் காவல்துறைக்கு எதிரான முறைப்பாடுகள் குறித்த தீர்வுகளை தேசிய காவல்துறை ஆணைக்குழு மேற்கொள்ளவில்லை.

2015ஆம் ஆண்டில் தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு 47,030,000 ரூபா ஒதுக்கப்பட்டது.

எனினும் 2018 இல் 127,764,000 ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

பிற செய்திகள்

Recent News