Tuesday, December 24, 2024
HomeLatest Newsஇஸ்ரேலில் அதிகரித்த வெப்பநிலை ; பல இடங்களில் தீவிபத்து...!

இஸ்ரேலில் அதிகரித்த வெப்பநிலை ; பல இடங்களில் தீவிபத்து…!

இஸ்ரேல் நாட்டின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் வெப்பநிலை தற்போது உச்சம் தொட்டுள்ளது.

குறிப்பாக 43 டிகிறி செல்சியஸ் வெப்பநிலையைக் கடந்த நிலையில் வரலாற்றில் அதிக வெப்பநிலை பதிவான ஜீன் மாதமாகவும் பதிவாகியுள்ளது.

வெப்பக் காற்றின் தாக்கத்தால் மின்துறையின் உள் கட்டமைப்பு சேதம் , மின்சாரத் தடை போன்றவற்றை இஸ்ரேல் எதிர்கொண்டுள்ளது.

இதன் விளைவாக இஸ்ரேலில் பல இடங்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ள நிலையி் இவற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் இஸ்ரேல் அரசு பல விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக குளிர்காய்வதற்காகமூட்டப்படும் தீயால் வெப்பநிலை அதிகரித்ததை அடுத்து காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை தீமூட்டுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெப்பநிலை உயர்வால் இஸ்ரேலில் சுமார் 220 திறந்தவெளிப் பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகாத நிலையில் தீயணைப்புத் துறையின் துரித நடவடிக்கையால் பாரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

Recent News