Thursday, December 26, 2024
HomeLatest Newsஇலங்கையில் அதிகரித்த தொழுநோயாளர்களின் எண்ணிக்கை..!

இலங்கையில் அதிகரித்த தொழுநோயாளர்களின் எண்ணிக்கை..!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அந்த காலப்பகுதியில், நாட்டின் பல பகுதிகளில் சுமார் 355 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பதிவாகியுள்ள தொழுநோயாளிகளில் சுமார் 10 வீதமானவர்கள் சிறுவர்கள் என தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

Recent News