இந்தியாவில் அருகி வந்த புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்சமயம் 3,167 புலிகள் இருப்பதாக நேற்றைய தினம் பிரதமர் மோடி அவர்கள் அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டலு பேட்டையில் உள்ள பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகளை கண்டுள்ள நிலையில், அதற்கு 50 வது ஆண்டு பொன்விழா நேற்று
நடத்தப்பட்டுள்ளது.
அதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி வனப்பகுதியில் ‘சஃபாரி’ உடையணிந்து ஜீப்பில் பயணம் செய்துள்ளார்.
பந்திப்பூர் காப்பகத்தில் புலிகள், யானைகள் தவிர, கரடிகள், இந்திய மலைப்பாம்புகள், குள்ள நரிகள், நான்கு கொம்பு மான்கள் உள்ளிட்ட பல உயிரினங்களை அவர் பார்வையிட்டுள்ளார்.
இதையடுத்து புலிகள் காப் பகத்தின் 50 வது ஆண்டு பொன் விழாவில் அவர் பங்கேற்றார்.
பொன்விழா காணும் பந்திப்பூர் புலிகள் காப்பகம் 1973 ஆம் ஆண்டில் 18,278 சதுர கிலோ மீட்டரில்
தொடங்கப்பட்டுள்ளது.
முதலில் ஒன்பது புலிகள் இங்கு விடப்பட்ட நிலையில் 75,000 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 53 புலிகள் வசிக்கின்றன.
பொன்விழாவில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2,967 லிருந்து 3,167ஆக
அதிகரித்துள்ளதாகவும், உலகத்தில் உள்ள புலிகள் எண்ணிக்கையில் 75 விழுக்காடு இந்தியாவில் உள்ளது எனவும் பெருமிதம் அடைந்துள்ளார்.
புரோஜெக்ட் டைகர்’ என்ற திட்டத்தினை ஆரம்பித்து 50 ஆண்டுகள் ஆனமையால் நினைவு நாணயத்தையும் அவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.