Sunday, January 12, 2025
HomeLatest Newsதங்க நகைகளை அடகு வைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தங்க நகைகளை அடகு வைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் குறைந்த வருமானம் மற்றும் வாழ்க்கைச் செலவு காரணமாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக வங்கிகளில் தங்க ஆதரவுக் கடன்கள் (அடைவு) அண்மைக்காலமாக வேகமாக அதிகரித்து வருவதாக நிதி அமைச்சின் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கையின் வங்கிகளில் 2022 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 193 பில்லியன் ரூபாய்களுக்கு அடகு வைக்கப்பட்டது.

பெரும்பாலும் நடுத்தர வருமானம் ஈட்டுபவர்களால், முக்கியமாக குழந்தைகளின் கல்வித் தேவைகள் மற்றும் விவசாயிகளின் விவசாய நோக்கங்களுக்காக இந்த அடகுக்கடன் பெறப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த தங்க அடகு முன்பணங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் 230 பில்லியன் ரூபாய்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் ஏராளமான மக்கள் மருந்துகள் மற்றும் உணவு போன்ற அவசர தேவைகளுக்காக தங்கள் தங்க ஆபரணங்களை அடகு வைத்துள்ளனர்.

அரச வங்கிகளைத் தவிர சில தனியார் வங்கிகள் ஏற்கனவே தங்கள் கடனைத் தீர்க்கக் கோரி வாடிக்கையாளர்களுக்கு இறுதி நோட்டீஸ் (அறிவித்தலை) அனுப்பியுள்ளன.

வங்கி நிலுவைத் தொகையை மீட்பதற்காக தங்கப் பொருட்களை ஏலம் விடுவதற்கான கடைசி எச்சரிக்கை அவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் தங்கத்தை அடகு வைக்கும் முன்பணங்களுக்கு 24 – 36 சதவீதம் என்ற உயர் வட்டி விகிதம் அறவிடப்படுகிறது. இதனை தங்களால் தாங்க முடியாதது என்று வாடிக்கையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Recent News