Wednesday, December 25, 2024
HomeLatest Newsபிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! வெளியான தகவல்

பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! வெளியான தகவல்

தலிபான்கள் வசம் உள்ள ஆப்கானிஸ்தானில் வறுமை மற்றும் வேலையின்மை அதிகரித்து வருவதால் தலைநகர் காபூல் நகரில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அரசு அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கினால், அவர்கள் பிச்சை எடுக்க மாட்டார்கள் என்று சில குடியிருப்பாளர்கள் கூறியதாக டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.

வீடு இருந்த போதும் போதிய பணம் இல்லாததால், நாங்கள் ஒரே கூடாரத்தின் கீழ் வாழ்கிறோம் என்று பிச்சைக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உண்மையான பிச்சைக்காரர்களை கண்டறிந்து, அவர்கள் பிச்சை எடுப்பதை நிறுத்தவும் அவர்களுக்கு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆப்கான் தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பசி மற்றும் சுகாதார நெருக்கடி நிலை ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிரிவு இயக்குனர் ஜோன் சிஃப்டன் தெரிவித்துள்ளார். சர்வதேச பொருளாதார கட்டுப்பாடுகள் அந்நாட்டை பேரழிவுக்கு தள்ளுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Recent News