Wednesday, December 25, 2024
HomeLatest Newsநடுவானில் விமானங்களின் குலுங்கல் அதிகரிப்பு...!ஆய்வில் திடுக்கிடும் தகவல்...!

நடுவானில் விமானங்களின் குலுங்கல் அதிகரிப்பு…!ஆய்வில் திடுக்கிடும் தகவல்…!

நடுவானில் பறக்கும் விமானங்களின் குலுங்கல் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த ரீடிங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்விலே இது கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வின் அறிக்கையில் கூறப்பட்ட சில தகவல்களாக, கார்பன் உமிழ்வினால் பூமி வெப்பமடைவதால் காற்றும் வெப்பமடைகின்றது.

இதனால், வானில் உயரமான காற்றின் வேகத்தில் சில மாறுபாடுகள் ஏற்படுவதால் விமானங்கள் நடுவானில் பறக்கும் பொழுது திடீரென குலுங்குகின்றன.

தற்போது இவ்வாறான விமான குலுங்கல் அதிகரித்துள்ளன. வடக்கு அட்லாண்டிக் பாதையில் காற்றின் வேகமாறுபாடு 55 விழுக்காடு அதிகரித்துள்ளதுடன் நடுவானில் பறக்கும் போது விமானம் திடீரென்று குலுங்குகின்றது.

அவ்வாறு விமானம் குலுங்கும் சந்தர்ப்பங்களில் விமானிகள் விமானத்தை இயக்குவதற்கு மிகவும் கஷ்டபடுகின்றனர்.

மேலும், வெப்ப காற்றில் சிக்கும் விமானங்களின் குலுங்கலை தவிர்ப்பதற்காக அமெரிக்க விமானப் போக்குவரத்து ஒரு வருடத்திற்கு 150 மில்லியன் டொலர் வரை செலவு செய்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Recent News