Wednesday, December 25, 2024
HomeLatest Newsபாலியல் தொழிலாளர்களும் பால்வினை நோயாளிகளும் அதிகரிப்பு! – சுகாதாரத்துறை அதிர்ச்சித் தகவல்

பாலியல் தொழிலாளர்களும் பால்வினை நோயாளிகளும் அதிகரிப்பு! – சுகாதாரத்துறை அதிர்ச்சித் தகவல்

பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அனுபவமற்ற பாலியல் தொழிலாளர்களின் வருகை காரணமாக இலங்கையில் பால்வினை நோய்களினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் மற்றும் பலருடன் பாலியல் உறவில் ஈடுபடுபவர்களே பால்வினை நோய்கள் அதிகரிப்பதற்கு காரணம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2022இன் முதல் காலாண்டு பகுதியில் 4556 எயிட்ஸ் நோயாளர்கள் இனம் காணப்பட்டனர். இது 2021 இல் முதல் காலாண்டு பகுதியில் காணப்பட்டதை விட 11.8 வீதமாகும் என தேசிய பாலினை எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது காலாண்டு பகுதியில் 4686 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் இது கடந்த ஆண்டை விட 13 வீதம் அதிகம்.

பாலியல் தொழிலாளர்களை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக அரசசார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதாக என தேசிய பாலினை எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களில் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என நாங்கள் இணைந்து பணியாற்றும் அரசசார்பற்ற அமைப்புகள் தெரிவிக்கின்றன என இலங்கையின் பாலியல் தொடர்புகளால் பரவும் நோய்களிற்கான பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கீதானி சமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கு நாட்டின் பொருளாதார நிலை காரணமாகயிருக்கலாம் என தெரிவித்துள்ள அவர் வழமையாக எங்கள் நாட்டின் பாலியல் தொழிலாளர்கள் பாதுகாப்பான முறைகளை பின்பற்றுவார்கள் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பான முறைகளை பின்பற்றுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் புதிதாக பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் இளவயதினர் அவர்களிற்கு பாதுகாப்பான வழிமுறைகள் குறித்து தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் அவர்கள் அனுபவம் அற்றவர்கள் என்பதால் தங்கள் வாடிக்கையாளர்களை பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்ற செய்ய தெரியாதவர்களாக உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக வருபவர்கள் அனைவரும் தற்போதைய பொருளாதார நிலையில் தங்கள் குடும்பங்களிற்கு உணவை வழங்குவதற்காக துரிதமாக பணம் சம்பாதிக்கும் நோக்கத்தை கொண்டவர்கள் இதன் காரணமாக அவர்களால் தங்கள் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான முறைகளை பின்பற்றுமாறு அவர்களால் கேட்டுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல் காலாண்டு பகுதியில் ஏனைய பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2221 ஆக காணப்பட்டது இது கடந்த வருடம் இதே காலப்பகுதியில் காணப்பட்டதை விட குறைவு எனினும் இரண்டாவது காலாண்டுபகுதியில் ஏனைய பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் 2576 ஆக அதிகரித்திருந்தது இது கடந்த வருடத்தை விட அதிகம்.

அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளிகளில் அதிகமானவர்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இது இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதை வெளிப்படுத்தியுள்ளது எனவும் சமரவீர தெரிவித்துள்ளார்.

2022 இல் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 1688பேர் 15 முதல் 49 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் 2610 பேர் அதேவயதை உடைய பெண்கள் .

பால்வினை நோய்கள் அதிகரிப்பதற்கு வேறு காரணங்கம் இருக்கக்கூடும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recent News