லடாக்கில் அசல் எல்லைக் கோடு பகுதியை அண்மித்து சீனா உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து வருகின்றது.
அந்த வகையில் அங்கு புதிய இராணுவ முகாம்களுடன் சூரிய மின்னொளி மற்றும் அனல் மின் நிலைய வசதிகளை அதிகரித்து வருகின்றது.
கடந்த மூன்று ஆண்டுகளிற்கு அதிமாக எல்லையில் சீனா படைகளைக் குவிப்பதனால் இந்தியாவுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வருங்காலத்தில் ஏதேனும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டால் அதனை எதிர்கொள்ளவதற்கு இந்தியாவும் தயாராக உள்ளது.
வட எல்லை பகுதிகளிலும் இராணுவம் கவனம் செலுத்தி வருவதுடன் புதிய படைகளை குவித்து வருகின்றது.
இவ்வாறான சூழலில், எல்லையில் சுமார் 50 ஆயிரம் பேரை நிறுத்தியுள்ள சீனப்படைகளுக்குத் தேவையான மின்சார வசதிகளுக்காக சூரிய மற்றும் அனல் மின்நிலையங்களை சீனா அமைத்து வருகின்றது.
இதன் மூலம், எல்லையோர கிராமங்களில் வசதிகளை மேம்படுத்தி உட்கட்டமைப்பு வசதிகளையும் சீனா பெருக்கியுள்ளது.