இன்று (18) முதல் வாகனங்களுக்கான பதிவு கட்டணங்கள் உள்ளிட்ட சில கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.
சாதாரண முறைமையின் கீழ் வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணம் 2,000 ரூபாவாகவும், முன்னுரிமை அடிப்படையிலான வாகன பதிவு கட்டணம் 3,000 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.
அத்துடன், ஒருநாள் சேவையின்கீழ், வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணம் 4 000 ரூபாவாகவும், தாமதமாகி செலுத்தப்படும் வாகன பதிவு கட்டணம் பல்வேறு கட்டங்களின் கீழும் அதிகரிக்கப்படுகிறது.
அவ்வாறு தாமதக் கட்டணமாக மகிழுந்துக்கு நாளொன்றுக்கு 100 ரூபாவும், உந்துருளிக்கு 50 ரூபாவும் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பதிவுசெய்யப்பட்ட வாகனத்திற்கான உறுதிப்படுத்தல் சான்றிதழ்களை திருத்தம் செய்வதற்காக மூவாயிரம் ரூபா அறவிடப்படவுள்ளது.
இதுதவிர, 1600 CC இயந்திர கொள்ளளவிற்கு குறைந்த மற்றும் 80 கிலோவோட்டிற்கும் அதிக திறன்கொண்ட மகிழுந்தின் முதல் பதிவிற்காக 25 000 ரூபா செலுத்தப்பட வேண்டும்.