குறை பிரசவத்தில் 96 சதவீத குழந்தைகள் இறப்பதற்கு காற்று மாசடைவதே காரணம் என்று ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு, ஐநா அமைப்பு ஆகியவை தனியார் நிறுவனத்துடன் இணைந்து அந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளன.
அதில், பிரசவம் , குறை பிரசவம் மற்றும் கர்ப்ப காலத்தில் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அந்த வகையில், குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் குறை பிரசவத்தின் மீதான பத்தாண்டு நடவடிக்கைகள் என்ற பெயரில் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் வெப்பம், புயல்கள், வெள்ளம், வரட்சி, காட்டு தீ மற்றும் காற்று மாசு ஆகியவை கர்ப்பத்தை பாதிக்கின்றது என்றும் குறைபிரசவத்தில் 91 சதவீத குழந்தைகள் இறப்பதற்கு காற்று மாசு தான் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.