Wednesday, December 25, 2024
HomeLatest Newsஅமெரிக்க இராணுவத்தில் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு

அமெரிக்க இராணுவத்தில் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு

அமெரிக்க இராணுவத்தில் பாலியல் ரீதியான கொடுமைகள் மற்றும் வன்முறைகள் சுமார் 13 வீதம் அதிகரித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பெண்களைவிட ஆண்களே அதிக பாலியல் வன்முறைகளுக்குட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதிகளவில் கடற்படையில் பாலியல் தொடர்பான வன்கொடுமைகள் காணப்பட்டு வருவதாகவும் பெண்களுக்கு பாலியல் ரீதியான கொடுமைகள் தொடர்ந்து வரும் சூழலில் தற்போது அவை ஆண்களுக்கும் ஏற்படுகின்ற போது தான் பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இராணுவ தலைமையகம் அமைந்துள்ள பென்டகனின் செய்திக் குறிப்பில் மேற்படி பாலியல் வன்முறை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் இவ்வாறான முறையற்ற மற்றும் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடும் இராணுவ வீரர்கள் கடுமையான தண்டனைகளுக்குட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

Recent News