Thursday, January 23, 2025
HomeLatest Newsவரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீச்சரம் ஆலயத்தின் சிவன் சிலை திறப்பு விழா

வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீச்சரம் ஆலயத்தின் சிவன் சிலை திறப்பு விழா

ஈழத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கேதீஸ்வரப்பெருமான் திருக்கோயில் திருக்குடத் திருமஞ்சனப் பெருசாந்தி பெருவிழாவான மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் புதன்கிழமை 06.07.2022 அன்று வெகு விமர்சையாக நடாத்தப்பட உள்ளது.

இதற்கமைய இந்நிகழ்விற்காக இன்றைய நாள் ஆரம்பிக்கப்பட்ட எண்ணெய்க்காப்பு தொடர்ந்து மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளது.

அந்தவகையில் இன்று திருக்கேதீச்சரம் பாலாவி தீர்த்தக்கரை அருகே இன்று நன்கு வடிவமைக்கப்பட்ட சிவன் சிலை திறந்து வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் குருக்கள்,பக்தர்கள் போன்ற பலர் கலந்து கொண்டிருந்தனர் .

Recent News