Friday, December 27, 2024
HomeLatest Newsஅடுத்த தேர்தலிலும் மொட்டு கட்சிக்கே வெற்றி-சாகர காரியவசம் கூற்று!

அடுத்த தேர்தலிலும் மொட்டு கட்சிக்கே வெற்றி-சாகர காரியவசம் கூற்று!

அடுத்த பொதுத்தேர்தலிலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும் – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” கோட்டாபய ராஜபக்ச இலங்கையர். அவர் நிச்சயம் நாடு திரும்புவார். சூழ்ச்சிமூலமே எமது தலைவர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த உண்மையை மக்கள் புரிய ஆரம்பித்துள்ளனர் .எதிர்காலத்தில் ஆதாரங்களுடன் அவை நிரூபனமாகும்.

அடுத்த, தேர்தலிலும் எமது கட்சிக்கே பெரும்பான்மை பலம் கிடைக்கும்.” – எனவும் செயலாளர் தெரிவித்தார்.

Recent News