டிரீச்சர் கோலின்ஸ் எனும் அரிய வகை குறைபாட்டுடன் பிறந்த ஜோனா வாங்ஸ்டர் தனது வாழ்க்கையில் கடந்து வந்த விடயங்கள் தொடர்பாக “எல்லா நாயகர்களும் தொப்பி அணிவதில்லை” என்ற நூலை எழுதி வருகின்றார். அவர் தனது வாழ்க்கை அனுபவங்களை பின்வருமாறு பகிர்ந்து கொண்டார் :-
நான் பிறந்து 36 மணி.நேரத்தில் எனது பெற்றோர் என்னைக் கைவிட்டுவிட்டதாக இதில் கூறப்பட்டுள்ளது. அது கடினமானதாக இருந்தது. டிரீச்சர் கோலின்ஸ் எனும் அரிய வகை குறைபாடானது என் தோற்றத்தையே பாதித்திருந்தது. என்னை வளரனத்தெடுத்த ஜீனிடம் இரண்டு வாரக் குழந்தையாகங் சென்றேன். எனக்கு ஐந்து வயதாக இருந்த போது தத்தெடுத்துக்கொண்டார்.
உயர்கல்வி படித்த காலதனதை திரும்பிப் பார்க்கையில் ஏராளமான சிறந்த நினைவுகள் உள்ளன. அந்த தருணங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முயற்சித்தேன். வயதில் முத்தவர்கள் என்னைக் கண்டதும் கண்ணைக் கீழே திருப்பிக்கொள்வார்கள்.
நான் வளர.வளர என்னுடன் பலரும் பந்தத்தை ஏற்படுத்தத் தொடங்கினர். இதற்கு முன்பு இது எனக்கு சாத்தியமானதாக இருந்ததில்லை. அதனால் என் முகத்தின் மீது எனக்கு அதிக வெறுப்பு வளர்ந்திருந்தது.
நான் காயப்பட்டிருந்தைப் போல் முகத்தையும் காயப்படுத்த விரும்பினேன்.
என் பெற்றோரை நினைக்கும் போது எனக்கு மிகவும் ஆத்திரமாக இருந்தது. அவகளைக் கண்டுபிடித்து நேரில் சென்று சந்தித்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன் என்பதைத் தெரியப்படுத்த விரும்பினேன். அதனால் ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு இரு வாரங்கள் கழித்து பதில் கடிதம் கிடைத்தது.
உங்களுடன் எந்தத்தொடர்பும் வைததிருக்கவிரும்பவில்லை. இதற்கு மேல் உறவு வைத்திருக்க முயன்றால் கண்டுகொள்ள மாட்டோம் என்று மட்டும் கூறப்பட்டிருந்தது. அதில் என் தாய் தந்தை ஆகிய இருவரும் கையொப்பமி்ட்டருந்தனர்.
அவர்களால் மீண்டும் நிராகரிக்கப்பட்டது என்னைக் காயப்படுத்தியது. சில ஆண்டுகளுக்கு முன் என்னைப் பேசுவதற்குப் பள்ளியில் அழைத்தார்கள். இரு குழந்தைகள் என்னிடம வந்து தமது பெற்றோரை தமக்கு தெரியாது எனவும் பலரால் கேலிக்குள்ளானோம் எனவும் கூறியிருந்தனர். அந்த கணத்தில் நான் இதை இன்னும் அதிகம் செய்ய வேண்டுமென உறுதியெடுத்தேன்.
கடந்த இரு ஆண்டுகளாக “எல்லா நாயகர்களும் தொப்பி அணிவதில்லை” என்று எனது வாழ்வில் சந்தித்தவர்களைப் பற்றி புத்தகமொன்றை எழுதி வருகின்றேன்.
முடிவில் எனக்கே எவ்வாறு நாயகனானேன் என்பதை அது விபரிக்கும். எனது வாழ்க்கை முழுவதும் அன்பாலும் சாகசத்தாலும் நிரம்பியது. என தனது வாழ்க்கையை புத்தகமாக எழுதி வருகின்றார்.