இந்தியாவின் புதிய பாராளுமன்றமானது கடந்த 28 ம் திகதி.திறந்து வைக்கப்படட நிலையில் திறப்பு விழாவின் பின் இந்தியா பிரதமர் நரேந்திர மோடி பின்வருமாறு உரையாற்றினார் ;
ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கான பயணத்தில் சில தருணங்கள் சாகாவரம் பெற்றவையாக நிலைத்து விடும் அதேபோல் தான் இந்த மே 28 ம் திகதியும். இப் புதிய நாடாளுமன்றம் வெறும் கட்டடமல்ல இந்தியாவிலுள்ள 140 கோடி மக்களின் ஆசையின் சின்னம். இந்தியாவின் உறுதிப்பாட்டை உலகிற்குபுதிய தகவலாக அளிக்கின்றது.
இதேவேளை இக் கட்டடமானது சுயாதீன இந்தியாவின் எழுச்சிக்கான அடையாளமாகக் காணப்படும் என்றார்.
சோழ அரசில் நீதி , நேர்மை , நல்ல நிர்வாகத்தை அடையாளப்படுத்திய புனிதமான செங்கோல் சபையில் நிறுவப்பட்டுள்ளது. அத்தகைய புனித செங்கோளின் பெருமையை மீட்டெடுக க முடிந்தது எமதுபெருமை தான். இந்த அவையில் அலுவல்கள் ஆரம்பிக்கும் போதெல்லாம் இச் செங்கோல் எமக்கு உத்வேகம் தரும் எனவும் மோடி குறிப்பிட்டார்.
இதைவிடப் பல்லாண்டு நீடித்த அந்நிய ஆட்சி எம் பெருமைகளைக் களவாடிவிட்டது. இன்று இந்தியா அந்த அடிமை மனோபாவத்திலிருந்து வெளியே வந்து விட்டது. புதிய நாடாளுமன்றத்திற்கான தேவை இருந்ததுடன் நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் எதிர்காலங்களில் அதிகரிக்க உள்ளோம். அந்த வகையி் புதிய நாடாளுமன்றத்தை அமைப்பது காலத்தின் தேவையாகக் காணபபட்டது எனச் சுட்டிக்காட்டினார்.