பாலஸ்தீனத்தின் காசா முனை மீது போர் தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பினரும் களம் குதித்துள்ளனர்.
அவர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர்.
பாலஸ்தீன வெற்றிக்காக இந்த தாக்குதல் தொடரும் என்று ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலின் செங்கடல் சுற்றுலாத் தலமான ஈலாட்டை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவிய ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த ஏவுகணை தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லாவுடன் சண்டை செய்து வரும் இஸ்ரேலுக்கு இந்த தாக்குதல் மேலும் சிக்கலை அதிகரித்துள்ளது. இப்படி இருக்கையில் தெற்கிலிருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்தினால் நிலைமை மோசமாகக்கூடும்.
அவ்வாறு ஒரு சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் உதவிக்கு இஸ்ரேல், அமெரிக்காவை அழைக்க வாய்ப்பிருக்கிறது.