Friday, January 24, 2025
HomeLatest Newsசிங்கப்பூரில், வாட்ஸ் அப் போன்ற தளங்களை கட்டுப்படுத்த திட்டம் - அமைச்சர் தியோ தகவல்!

சிங்கப்பூரில், வாட்ஸ் அப் போன்ற தளங்களை கட்டுப்படுத்த திட்டம் – அமைச்சர் தியோ தகவல்!

உலகெங்கிலும் WhatsApp சேவையில் சென்ற மாதம் 25ஆம் திகதி தடங்கல் ஏற்பட்டுக் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் நீடித்தது.

அதற்கு என்ன காரணம் என்பதையும், அதனால் சிங்கப்பூரர்கள் எத்தனை பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டது என்பதையும் தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (IMDA) ஆராய்கிறதா என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்டது.

அதற்கு எழுத்து மூலம் பதிலளித்தார் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் தியோ, “தடையால் சிங்கப்பூர் மட்டுமின்றி ஆப்பிரிக்கா, ஆசியா ஐரோப்பா முழுவதும் உள்ள பயனீட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

தொழில்நுட்பக் கோளாற்றால் தடை ஏற்பட்டதாக WhatsApp-ஐ நிர்வகிக்கும் Meta நிறுவனம் பின்னர் கூறியது. இணைய அடிப்படையில் சேவையாற்றும் WhatsApp போன்ற தகவல் பரிமாற்றத் தளங்களின் சேவைத்தரம், தடை ஆகியவற்றை சிங்கப்பூர் கட்டுப்படுத்துவதில்லை.

இவை அனைத்துலகச் சந்தைகளில் இயங்கும் தளங்கள். அதனால் பயனீட்டாளர்கள் மாற்றுச் சேவையை நாட வேண்டும் அல்லது அழைத்துப் பேசுவது, குறுந்தகவல் அனுப்புவது போன்றவற்றின் மூலம் தொடர்புகொள்ள வேண்டும்.

பல மாற்றுச் சேவைகள் இருப்பதால் பிரச்சினையில்லை. மின்னிலக்கச் சேவைகள் மாறிக்கொண்டே வரும் வேளையில், அவற்றை அமைச்சும் ஆணையமும் தொடர்ந்து கண்காணிக்கின்றன.

தேவைப்பட்டால் கொள்கைகளும் கட்டுப்பாடுகளும் மறு ஆய்வு செய்யப்படும்” என அமைச்சர் தியோ மேலும் தெரிவித்துள்ளார்.  

Recent News