ஒரே நாளில் 66,000 போலி சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சீனாவில் சமூக வலைதளத்தின் ஊடாக தேவையற்ற வதந்திகளை பரப்புதல் மற்றும் பண மோசடி போன்ற செயற்பாடுகளில் சிலர் ஈடுபடுவதாக அரசாங்கத்திற்கு புகார்கள் வழங்கப்பட்டுள்ளது.
அந்த புகாரின் அடிப்படையில், கடந்த மார்ச் மாதம் முதல் சிறப்பு சோதனையை சீன அரசு மேற்கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில், 66,000 போலி சமூக வலைதள கணக்குகளை சீன அரசு முடக்கியுள்ளது.
அத்துடன், தொழில் செயலியில் சுமார் ஒன்பது லட்சம் கணக்குகள் தவறான கருத்துக்களை பதிவிட்டதற்காக தண்டிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.