Thursday, January 23, 2025
HomeLatest Newsஜப்பானில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களை காணொலியாக்கி காசாக்கும் கும்பல்.....!

ஜப்பானில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களை காணொலியாக்கி காசாக்கும் கும்பல்…..!

ஜப்பானில் ரயிலில் பயணிக்கும் பெண்களின் உடலை.அனுமதியின்றி தொடுவது , வருடுவது போன்ற செயல்களில் ஆண்கள் ஈடுபடும் தருணத்தில் அக்காட்சிகளை படம் பிடித்து விற்பனை செய்யும் கும்பலொன்று செயற்பட்டு வருகின்றது.

பதிவு செய்யப்படும் பெரும்பாலான காணொலிகள் ஒரே மாதிரியாகத் தான் எடுக்கப்படும் நிலை காணப்படுகின்றது.ரயி் பயணத்தில் ஒரு பெண்ணை இரகசியமாகப் பின் தொடர்ந்து தவறுதலாக இடிப்பது போல் இடிப்பது , உடலைவருடுவது போன்ற பாலியல் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு அதனை காணொலியாகப் பதிவு செய்கின்றனர்.

பின்னர் இக் காணொலிகள் இவ்வாறான காணொலிகளை விற்பனை செய்வதற்காக இயங்கும் இணையத்தளங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

குறித்த நபர்கள் ஆயிரக்கணக்கான பெண்களை இவ்வாறு வீடியோக்களை எடுத்து இணையத்தளத்தில் விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை பொது இடங்கள் , பொதுப் பிரயாணங்களின் போது பெண்கள் இவ்வாறான இடர்களுக்குள்ளாவதுடன் பெரும்பாலானோர் இது பற்றி வெளித்தரப்புடன் கலந்தாலோசிக்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பெண்களில் வெறும் பத்து சதவீதமான பெண்களே முறைப்பாடு அளி்கின்றனர். இது போன்ற குற்றங்களால் பாதிப்படையும் பெண்கள் இது குறித்து புகாரளிக்க வேண்டுமென ஜப்பான் பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.

ஜப்பானில் இப் பிரச்சினை சர்வ சாதாரணமாக உருவெடுத்துள்ள நிலையில் அமெரிக்கா , கனடா உட்பட ஏனைய நாடுகளிலிருந்து ஜப்பானு்கு செல்லும் பெண்களை அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Recent News