Sunday, January 26, 2025
HomeLatest Newsகனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவருக்கு லொட்டரியில் அடித்த அதிஷ்டம்!

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவருக்கு லொட்டரியில் அடித்த அதிஷ்டம்!

கனடாவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் சேர்ந்து வாங்கிய லொட்டரியில் அரை மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்துள்ளதால் அவர்கள் அனைவரும் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

ஒன்ராறியோவில் வாழும் ஒரே குடும்பத்தினரான Siobhan Quinlan, Barbara Quinlan, David Quinlan, Andrea Merrick, David Merrick மற்றும் Shannon Steele ஆகியோருக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது.

தற்போது அவர்களுக்கு ஆளுக்கு 83,333 டொலர்கள் கிடைத்துள்ளது. இலங்கை பணத்தில் இது சுமார் 2 கோடியே 25 இலட்ச ரூபாய் ஆகும்.

இந்த மகிழ்ச்சியான செய்தியால் தாங்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக அந்த குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Recent News