Tuesday, December 24, 2024
HomeLatest Newsஇம்ரான் கானின் கட்சிக்கு தடை - பாகிஸ்தான் அரசு அதிரடித் தீர்மானம்..!

இம்ரான் கானின் கட்சிக்கு தடை – பாகிஸ்தான் அரசு அதிரடித் தீர்மானம்..!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி மீது தடை விதிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் கடந்த 9 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு ஆஜராக சென்ற பொழுது அவரை துணை இராணுவத்தினர் அதிரடியாக கைது செய்தனர்.

இதனால், அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதால் வன்முறை வெடித்தது. லாகூர் படைப்பிரிவு கமாண்டர் அலுவலகம், மியான்வாலி விமானப்படை தளம், ராவல்பிண்டி இராணுவ தலைமையகம் மற்றும் பைசலாபாத்தில் உள்ள ஐஎஸ்ஐ கட்டிடம் உட்பட பல இராணுவ தளங்களை அவரது கட்சியினர் தாக்கினார்கள்.

இவ்வாறு இருக்கையில், நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா ஆசிப், இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, இராணுவம் மற்றும் பொது சொத்துக்கள் மீது தனது ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல்களை கண்டிப்பதற்கு இம்ரான் கான் இப்பொழுதும் தயங்குவதாக கூறியுள்ளார்.

அந்த வகையில், இராணுவ தளங்களை தாக்கியதால் அவரது தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை தடை செய்வது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், ஆயினும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர், அந்த கட்சியை தடை செய்ய அரசு தீர்மானித்தால் இந்த தீர்மானம் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இம்ரான் கான், இராணுவத்தை தனது எதிரியாக கருதுகின்றார்.

அவரது முழு அரசியலும் இராணுவத்தின் ஆதரவுடன் நடந்தமையால் தற்பொழுது இராணுவத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்’ என பாதுகாப்புத்துறை மந்திரி கூறியுள்ளார்.

Recent News