Saturday, January 18, 2025
HomeLatest NewsWorld Newsஇம்ரான்கானின் காவல் நீடிப்பு - அதிரடி காட்டும் நீதிமன்றம்..!

இம்ரான்கானின் காவல் நீடிப்பு – அதிரடி காட்டும் நீதிமன்றம்..!

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் காவல் நீட்டிக்கப்பட்டது.


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது தூதரகம் அனுப்பிய ரகசிய தகவலை அமெரிக்காவுக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டு அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறியதாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

இதற்கிடையே தோஷகானா வழக்கில் கடந்த மாதம் 5-ந் தேதி இம்ரான்கான் கைது செய்யப்பட்டு அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். அதேசமயம் இந்த அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறிய வழக்கில் இவரை விசாரணை செய்வதற்காக இவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் தற்போது 3-வது முறையாக இந்த 14 நாள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 10-ந் தேதி வரை அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார்.

இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் வெளியுறவு மந்திரி முகமது குரேஷிக்கும் நீதிமன்ற காவலை நீட்டித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

Recent News