இஸ்லாமாபாத் : இம்ரான் கான், அவரது மனைவி மற்றும் பி.டி.ஐ கட்சியைச் சேர்ந்த 80 பேர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற, அந்நாட்டு அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த மே 9-ஆம் தேதி ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராக இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை துணை ராணுவப் படையினர் அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதனைக் கண்டித்து இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகம் உட்பட பல ராணுவ தளங்களை இம்ரான் கானின் கட்சியினர் சேதப்படுத்தினர்