Wednesday, December 25, 2024
HomeLatest Newsஇரண்டு திருமணம் செய்யாவிட்டால் ஆண்களுக்கு சிறை; தவறாக பரவிய செய்திக்கு எரித்திரியா போர்க்கொடி!

இரண்டு திருமணம் செய்யாவிட்டால் ஆண்களுக்கு சிறை; தவறாக பரவிய செய்திக்கு எரித்திரியா போர்க்கொடி!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காட்டுத் தீயைப் போன்று சமூக வலைத்தளங்களில் எரித்திரியாவைக் குறித்த செய்தி பரவியது.

அதாவது “எரித்திரியாவில் ஆண்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், எனவே ஒரு ஆண் இரண்டு பெண்களை கட்டாய திருமணம் செய்ய வேண்டும்.  இல்லையேல் இரண்டு வருட சிறைத் தண்டனை வழங்கப்படும்.” என்பதேயாகும்.

இந்த செய்தியினால் உலகளவில் பல இளைஞர்கள் எரித்திரியாவிற்கு பயணமாக ஆயத்தமான நிலைகளும் காணப்பட்டதாக சர்வசே செய்திகள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் எரித்திரிய அரசாங்கம் மேற்படி செய்தி குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளாகவும், எரித்திரிய அரச சார்பு ஊடகங்களோ, அரசு சார்பானவர்களோ இவ்வாறான ஒரு கருத்தை தெரிவிக்கவில்லை என்றும் மேற்படி பொய்யான கருத்துக்கள் மூலம் எரித்திரியாவின் இறையாண்மை பாதிக்கப்படுவதாகவும் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எரித்திரியாவின் தகவல் தொடர்பாடல் அமைச்சர் Yemane Gebremskel கருத்து தெரிவிக்கும் போது,

“உலகளாவிய ரீதியில் சமூக வலைத் தளங்களில் தவறான விதத்தில் பரப்பப்பட்ட செய்திக்கு எரித்திரிய அரசு எவ்விதத்திலும் பொறுப்பல்ல, இவ்வாறான செய்திகள் மிகவும் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. இவை நகைப்பாக தெரிந்தாலும் ஆபத்தானவை” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சில தனியார் ஊடகங்கள் மேற்படி கருத்து உண்மையாக இருக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.

கடந்த 1998-2000 ஆண்டு காலப் பகுதியில் எரித்திரியாவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தங்களில் பல ஆண்கள் கொல்லப்பட்ட நிலையில் தற்போது திருமண வயதில் ஆண்களுக்கு பற்றாக்குறை காணப்படக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாக் கொண்டியங்கும் தனியார் மனித உரிமைகள் அமைப்பு இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது,

“எரித்திரியா மனித உரிமைகள் தொடர்பில் மிகவும் பின் தங்கி இருப்பதாகவும், பல சட்டவிரோத மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகவும், எரித்திரியாவை “ஆபிரிக்காவின் வடகொரியா” என அழைக்கும் நிலையில் மனித உரிமைகள் மோசமடைந்திருக்கிறது” என்றுள்ளது .

Recent News