Tuesday, December 24, 2024
HomeLatest Newsவெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு புதிய நடைமுறையொன்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கை பிரஜைகளுக்கு பதிவாளர் நாயகத்தின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருமண வயது வரம்பை உயர்த்துவது குறித்தும் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதுடன், திருமணப்பதிவாளர் சட்டத்தில் திருத்தம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி இவ்வருடம் சுமார் 1800 வெளிநாட்டவர்கள் இலங்கையர்களை திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பெண்கள் திருமணம் செய்து வெளிநாடுகளில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Recent News