Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஉலகின் தனிமைப்படுத்தப்பட்ட தலைவர்களிடையே முக்கிய சந்திப்பு..!

உலகின் தனிமைப்படுத்தப்பட்ட தலைவர்களிடையே முக்கிய சந்திப்பு..!

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் புதன்கிழமை நேரில் சந்தித்தார்.

அணு ஆயுத சோதனைகளை நடத்தியதன் மூலமும் ஐ.நா. தடையையும் மீறி நீண்ட தொலைவு பாய்ந்து செல்லும் பலிஸ்டிக் வகை ஏவுகணைகளை உருவாக்கி வருவதாகவும் சா்வதேச அளவில் வட கொரியா நீண்ட காலமாகவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், மேற்கத்திய நாடுகளின் எதிா்ப்பையும் மீறி உக்ரைன் மீது படையெடுத்ததன் மூலம் ரஷியாவையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சா்வதேச அளவில் தனிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன.

இந்தச் சூழலில், இரு நாடுகளின் அதிபா்களான கிம் ஜோங்-உன்னும், விளாதிமீா் புதினும் நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைக்காக கிம் ஜோங்-உன் பயணம் மேற்கொண்ட ரயில், செவ்வாய்க்கிழமை ரஷியா வந்தடைந்தது.

இந்நிலையில், மாஸ்கோவில் ரஷிய அதிபரை சந்தித்து கிம் ஜோங்-உன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, தங்களுக்குத் தேவையான சில பொருளாதார உதவிகளை புதினிடம் கிம் ஜோங்-உன் கோருவாா் என்று கூறப்படுகிறது.

முக்கியமாக, உக்ரைன் போரில் ரஷியா பயன்படுத்துவதற்கான ஆயுதங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் இந்தப் பயணத்தின்போது மேற்கொள்ளப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வட கொரியாவிடமிருந்து எறிகணை குண்டுகள், பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகளைக் கொள்முதல் செய்ய ரஷியா விரும்புவதாகக் கூறப்படுகிறது

Recent News