Friday, January 24, 2025
HomeLatest Newsகனடாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

கனடாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

கனடாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 90 % சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

கனடாவில் கொரோனா காரணமாக 46 ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.

இவற்றில் 92.8 சதவீதமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என புதிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் பதிவான உயிரிழப்புகளில் 0.1 சதவீதமானவை மாத்திரமே 11 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரியவருகிறது.

இறுதியாக வெளியான தகவல்களின் அடிப்படையில் 83.3 சதவீதமான கனேடியர்கள் ஒரு கொரோனா தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

Recent News