Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsமோடி எடுத்த முக்கிய முடிவு -வெளியான அறிவிப்பு..!

மோடி எடுத்த முக்கிய முடிவு -வெளியான அறிவிப்பு..!

ஆகஸ்ட் 22-24 தேதிகளில் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவின் அழைப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டார்.

இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் தங்கள் இராஜதந்திர உறவுகளின் 30 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் நிலையில் இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்தும் இரு தலைவர்களும் தொலைப்பேசி உரையாடலின் போது ஆய்வு செய்தனர்.

தற்போதைய ஜி 20 மாநாட்டில் இந்தியாவின் முன்முயற்சிகளுக்கு ஜனாதிபதி ராமபோசா தனது ஆதரவை வழங்கினார். மேலும் இந்தியாவில் நடைபெறும் ஜி -20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள விருப்பமும் தெரிவித்திருந்தார்.

எனவே மறுபுறம் தென்னாபிரிக்காவின் அழைப்புக்கு மோடி பச்சை கொடி காட்டியுள்ளார்.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டணி, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி, வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.

அந்தவகையில் இதில் மோடி கலந்துகொள்வது சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent News