Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஇந்திய-ரஷியா இடையே முக்கிய ஒப்பந்தம் - மத்திய மந்திரி வெளியிட்ட தகவல்..!

இந்திய-ரஷியா இடையே முக்கிய ஒப்பந்தம் – மத்திய மந்திரி வெளியிட்ட தகவல்..!

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் ரஷிய தொழில்நுட்ப உதவியுடன் கடந்த 2002-இல் கட்டப்பட்ட, 2016-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்ற கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறன்கொண்ட முதலாவது அணுஉலை 2027-ஆம் ஆண்டில் முழு அளவிலான மின்உற்பத்தி திறனுடன் செயல்படத் தொடங்கும் என ரஷிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கோய் லாவ்ரோவை மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் புதன்கிழமை அதாவது இன்று சந்திக்கின்றார். அப்போது இருதரப்பு மற்றும் சா்வதேச பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்துவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ரஷியாவுக்கு 5 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் இந்தப் பயணத்தின்போது ரஷிய துணை பிரதமா் டெனிஸ் மான்ட்டுரோவை செவ்வாய்க்கிழமை சந்தித்து இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளார். அப்போது அணுமின் நிலையம் மருந்துகள் மருந்தியல் பொருள்கள் மருத்துவக் கருவிகள் தொடா்பான ஒப்பந்தங்கள் இரு நாடுகளுகளுக்கு இடையே கையொப்பமாகின.

இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய ஜெய்சங்கா் ரஷிய துணை பிரதமா் உடனான சந்திப்பு குறித்து கூறுகையில் துணை பிரதமா் மான்ட்டுரோவுடனான சந்திப்பின்போது கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கான எதிா்கால அணுஉலைகள் குறித்து முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.


பாதுகாப்புஇ அணுமின் உற்பத்தி விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியாவின் சிறந்த கூட்டாளியாக ரஷியா உள்ளது. இந்தியா-யூரேஷியா பொருளாதார மண்டலத்துக்கு இடையே தடையில்லா வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தை ஜனவரி மாத இறுதியில் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Recent News