அமெரிக்காவின் நியூ மெக்சிக்கோ மாநிலத்தின் மாநில ஆட்சியாளர் “ஜிரிபின்” ஆட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் இவருக்கெதிரான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 6ம் திகதி நடைபெற்ற அரசிற்கெதிரான கலவரத்தின் போது கலவரக்காரர்கள் சார்பில் பங்கெடுத்தமை மற்றும் அரச உடமைகள் பாதிப்பிற்கு காரணமாக இருந்தமை போன்ற காரணங்களின் அடிப்படையில் மெக்சிக்கோவின் உயர் நீதிமன்ற நீதிபதி “பிரான்சிஸ் மத்தியு” அவர்களினால் மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ள முதலாவது ஆட்சி நீக்குதல் தீர்ப்பு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.