Saturday, January 11, 2025
HomeLatest Newsஐ.எம்.எப். தலைமையகத்தின் முன் போராட்டத்தில் குதித்த இலங்கையர்.

ஐ.எம்.எப். தலைமையகத்தின் முன் போராட்டத்தில் குதித்த இலங்கையர்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுமாறு வலியுறுத்தி அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்துக்கு முன்பாக அமெரிக்க வாழ் இலங்கையர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போராட்டக்காரர்களின் கோரிக்கையாக கொள்ளை அடிக்கப்பட்டுள்ள மக்கள் பணத்தை மீளப்பெறுவதற்கு சட்டம் இயற்றப்பட வேண்டும் என காணப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையின் நிதி அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவரும் நிலையில் நாணய நிதியத்துக்கு முன் இந்த போராட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News