Wednesday, December 25, 2024
HomeLatest Newsநான் அப்படி படுக்கும் ஆள் இல்லை! தூங்குவது குறித்து ஓபனாக பகிர்ந்த நயன்தாரா

நான் அப்படி படுக்கும் ஆள் இல்லை! தூங்குவது குறித்து ஓபனாக பகிர்ந்த நயன்தாரா

கனெக்ட் படத்தின் ப்ரொமோஷனுக்காக பேட்டி கொடுத்த நயன்தாரா திருமணம் குறித்தும், தான் இரவு தூங்குவது குறித்தும் பல உண்மைகளை உடைத்துள்ளார்.

தமிழில் நம்பர் ஒன் நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வரும் நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதுடன், இரட்டைக் குழந்தைகளுக்கும் தாயாகி உள்ளார்.

திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா கனெக்ட் படத்தில் நடித்ததுடன், இப்படத்தின் ப்ரொமோஷனுக்கு சமீபத்தில் டிடி உடன் பேட்டி அளித்துள்ளார்.

குறித்த பேட்டியில், திருமணம் என்பது மகிழ்ச்சியான ஃபீலிங் என்றும், பெண்களுக்கு திருமணம் என்பது இடைவேளை கிடையாது… திருமணத்திற்கு பின்பு பெண்களின் வாழ்க்கை மாற வேண்டும் என்ற எந்தவொரு கட்டாயம் இல்லை.

அந்த கால கட்டத்தில் ஆடியோ லாஞ்ச் என்றால் தனக்கு ஒரு ஓரமாகவே இடம் கிடைக்கும். இதற்காகவே எந்தவொரு நிகழ்விலும் கலந்து கொள்வதை தவிர்த்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் இதனை மாற்றுவதற்காகவே பெண்களுக்கு முக்கியத்தும் அளிக்கும் படத்தினை தெரிவு செய்து நடித்தேன். பேய் மீது ஆரம்பத்தில் நம்பிக்கை இல்லாமல் இருந்தது.

சிறுவயதில் யாரோ சொல்வதைக் கேட்டுவிட்டு மல்லாக்க படுக்கவே மாட்டேன். தற்போதும் ஒன் சைடாக கைவைத்து தான் தூங்குவேன். நேராக படுத்தால் நம் மேல் யாராவது வந்து இறங்கிடுவாங்ளோனு பயம் இருக்கும். மேலும் தூங்கும் போது லைட்டை கூட ஆஃப் செய்யாமல் தான் படுப்பதாக கூறியுள்ளார்.

Recent News