Thursday, January 23, 2025
HomeLatest Newsஆர்கியுமென்ட் வேண்டாம்... கத்தி அழுது ஒப்பாரி வைக்கும் ஜனனி... ஓடி வந்து ஆறுதல் சொல்லும் ஹவுஸ்மேட்ஸ்...

ஆர்கியுமென்ட் வேண்டாம்… கத்தி அழுது ஒப்பாரி வைக்கும் ஜனனி… ஓடி வந்து ஆறுதல் சொல்லும் ஹவுஸ்மேட்ஸ் … வெளியானது வீடியோ..!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில், சீசன் 6ஆனது தற்போது 5ஆவது வாரத்தை நிறைவு செய்யக் காத்திருக்கின்றது. அத்தோடு இந்நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. 

அதாவது போட்டியாளர்களுக்கிடையில் சண்டை, கோபம், அழுகை என அனைத்து விதமான உணர்ச்சிகளும் நாளுக்கு நாள் வெளிப்பட்ட வண்ணம் தான் இருக்கின்றன. அதிலும் இன்றைய நாளுக்குரிய முதலாவது ப்ரோமோவிலே மணிகண்டனுக்கும், அமுதவாணனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் “இந்த டாஸ்க்கில் ஒழுங்காக விளையாடாதவர் யார்” என்ற கேள்வியை பிக்பாஸ் கேட்கின்றார். அதற்கு உடனே விக்ரமன் எழுந்து ஜனனியை கூறுகின்றார்.

அதற்கு உடனே ஜனனி “நானே போறேன் ஆர்கியூமென்ட் பண்ண வேணாம்” என்கின்றார். ஆனால் விக்ரமனோ திரும்ப அதையே பேச ஆரம்பிக்கின்றார். உடனே ஜனனி எழுந்து தலையணையை தூக்கி எறிந்து விட்டு ஒப்பாரி வைச்சு அழுகின்றார். உடனே சக போட்டியாளர்கள் ஓடி வந்து அவருக்கு ஆறுதல் சொல்கின்றனர்.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!

Recent News