Friday, November 15, 2024
HomeLatest Newsசட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை: களத்தில் இறங்கிய வடக்கு ஆளுநர்!

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை: களத்தில் இறங்கிய வடக்கு ஆளுநர்!

வடமாகாண கடற்றொழிலாளர்கள் தமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை zoom செயலி ஊடாக நேற்று முன்தினம் சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலில் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா கூறுகையில்,

சட்ட விரோத சுருக்கு வலைத் தொழிலைக் கட்டுப்படுத்துவதற்கு சட்ட ஏற்பாடுகள் இருந்தும் கடற்படை அதனை நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் காட்டுவதாக தெரிவித்தார்.

பாரம்பரிய மீனவ மக்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் பொருட்டு கடற்படைக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார்.

யாழ். பருத்தித்தீவில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத கடல் அட்டைப் பண் ணைக்கு ஆதரவாக அதிகாரிகள் செயற்படுவதாக தெரிவித்ததுடன் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரிகளைப் பணிக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த விடயங்கள் தொடர்பில் துறை சார்ந்த அதிகாரிகளை யும் மீனவப் பிரதிநிதிகளையும் அழைத்து பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி முடிவு ஒன்றை எட்டுவதாக தெரிவித்தார்.

சுருக்கு வலை தொடர்பில் சட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விடய ங்களை மீறி தொழில் செய்ய முடியாது என கூறியதுடன் மீனவ சங்கங்கள் எழுத்து மூலம் தந்தால் நீதிமன்ற நடவடிக்கைக்கு தான் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Recent News