Wednesday, December 25, 2024
HomeLatest Newsமீறினால் சுடுவோம்! போராட்டக்காரர்களுக்கு இராணுவம் எச்சரிக்கை

மீறினால் சுடுவோம்! போராட்டக்காரர்களுக்கு இராணுவம் எச்சரிக்கை

அரச சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் எவரும் செயற்பட முடியாது. அவ்வாறு செயற்படுவோர் மீது இராணுவ அதிகாரம் பிரயோகிக்கப்படும்.

இவ்வாறு இலங்கை இராணுவம் விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

நாடு அமைதி நிலை பேணப்பட வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டுள்ளமையாலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதாலும் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் செயற்படுவதை ஆர்ப்பாட்டக்காரர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறில்லையெனில் அமைதியை நிலைநாட்டுவதற்காகப் பாதுகாப்புப் படையினர் முழுமையான அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டியேற்படும் – என்று இலங்கை இராணுவம் மேலும் அறிவித்துள்ளது.

Recent News