Monday, December 23, 2024
HomeLatest Newsகாலையில் எழுந்ததும் தவறாது இதை செய்தால் ஆயுள் கூடும்!

காலையில் எழுந்ததும் தவறாது இதை செய்தால் ஆயுள் கூடும்!

காலை நேரத்தில் ஒவ்வொரு மனிதனும் தவறவிடக்கூடாத சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை முறையாக செய்தால் ஆயுள் கூடும்.   

உறக்கம் விழித்தல்

ஒருவர் எப்போதும் இரவு நேரமாக படுத்துறங்கி, அதிகாலை எழுவது நீண்ட ஆரோக்கியத்திற்கு வித்திடும். அதிகாலை எழும்போது உடல் உபாதை பிரச்சனைகள் இருக்காது. பல்துலக்கி, மிகவும் பிரெஷ்ஷாக இருப்பீர்கள். அன்றைய பொழுதை திட்டமிடுவதற்கு போதுமான நேரம் உங்களிடம் இருக்கும். இதனால், செய்ய வேண்டியதை சரியாக செய்து மகிழ்ச்சியுடனும் புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள். 

உடற்பயிற்சி

காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க மறக்கக்கூடாது. ஒரு லிட்டர் தண்ணீராவது குடித்தீர்கள் என்றால், உடல் கழிவுகள் மளமளவென வெளியேறிவிடும். சிறிது நேரம் கழித்து உடற்பயிற்சி செய்ய தொடங்க வேண்டும். முதலில் சில வார்ம் அப் உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு, அதன்பின் கடினமான பயிற்சிகளை செய்யத் தொடங்குங்கள்.

தியானம்

காலை நேரம் மிகவும் அமைதியான நேரம். அந்த நேரத்தில் மனமும் உடலும் மிகவும் அமைதியாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும். அந்த நேரத்தில் நீங்கள் தியானம் செய்தால் மன ஒருமைப்பாடு மேம்படும். சிந்தனை கூர்மையும், தெளிவான பார்வையும் உங்களிடம் இருக்கும். யோகா பயிற்சிகளையும் செய்யலாம். இயற்கை எழில்கொஞ்சும் பகுதியில் இதனை நீங்கள் செய்தால், நிச்சயம் ரிலாக்ஷாக உணர்வீர்கள். 

காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதனை நீங்கள் எப்போதும் தவறவிடக்கூடாது. அந்த உணவில் நிறைய காய்கறிகள், கீரை இருப்பது அவசியம். ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துக் கொள்ளும்பட்சத்தில் உடல் உபாதைகள் ஏதும் ஏற்படாது. இவற்றில் நீங்கள் எதை தவறவிட்டாலும், நீங்கள் மருத்துவர்களுக்காக உழைக்கிறீர்கள் என்று அர்த்தம். 

Recent News