Friday, November 22, 2024

சமையலறையில் இதை செய்தால் பணம் கூரையை பிச்சுக்கிட்டு பணம் கொட்டுமாம்!

வீட்டில் நாம் செய்யும் சில சிறிய தவறுகள் நமக்கு பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வாஸ்து படி, வீட்டில் பூஜை அறைக்கு அடுத்து முக்கியமான அறையாக கருதப்படுவது சமையலறை. சமையலறையில் அன்னப்பூரணியும், அன்னை லக்ஷ்மியும் இருப்பதாக கூறப்படுகிறது. சமையலறை தென்கிழக்கு திசையில் அமைப்பது நல்லது. சமையலறையில் நாம் செய்யும் சின்ன தவறால் தொழில் வளர்ச்சி மற்றும் நிதி வளம் ஆகியவற்றை பாதிக்கும் என கூறப்படுகிறது. உங்கள் வீட்டில் பணம் கூரையை பிச்சுக்கிட்டு பணம் கொட்ட இந்த விஷயங்களை செய்யவும்.

​ஆரோக்கியத்தை கொடுக்கும் சமையலறை

“ஆரோக்கியமே ஒருவரின் தலையாய செல்வம்” என பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அது உண்மை தான். வீட்டு உறுப்பினர்களின் ஆரோக்கியம் வீட்டின் சமையலறையைப் பொறுத்தது என்று ஃபெங் சுய் விளக்குகிறது. சமையலறை ஆரோக்கிய ஆற்றலைக் குறிக்கிறது மற்றும் வீட்டில் சில தவறுகள் மற்றும் பிழைகளை சரிசெய்வது நிதி வரவை மேம்படுத்தும்.

ஃபெங் சுய் மீதான இந்த நம்பிக்கை சீன கலாச்சாரத்தின் இன்றியமையாத ஒன்றாகும். ஃபெங் சுய் நிபுணர்களின் கூற்றுப்படி, நல்ல வைபுகளை வெளியிடும் சமையலறை செழிப்பையும் செல்வத்தையும் அதிகரிக்கிறது. எனவே, உங்கள் சமையலறையில் நல்ல ஆற்றல் உங்கள் வீட்டிற்குள் பாய்வதற்கு நல்ல ஃபெங் சுய் கொள்கைகளைப் பின்பற்றுவது அவசியம். எனவே, சமையலறையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை தவறாமல் பின்பற்றவும்.

உங்கள் சமையலறையில் நேர்மறை ஆற்றலை நிரப்புவதற்கு சில மாற்றங்களை செய்யலாம். இதில், தூய்மை, வாசனை, நிறங்கள் ஆகியவை முக்கியம். உங்கள் சமையலறையில் நல்ல ஆற்றலை நிரப்ப கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பின்பற்றவும்.

​உபயோகம் இல்லாத பொருட்களை அகற்றவும்

சமையலறை அன்னை லட்சுமி இருக்கும் இடமாக கருதப்படுகிறது. எனவே, உங்கள் சமையலறை தென்கிழக்கு திசையை நோக்கி இருப்பதை உறுதிப்படுத்தவு. அதே போல, சமையலறையில் நீங்கள் உபயோகப்படுத்தாத பொருட்களை வைக்க வேண்டாம். அது, உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும். அதே போல, சமையலறை எவ்வளவு அகலமாக இருக்கிறதோ, அவ்வளவு பண வரவும், அன்னபூரணியின் அருளும் கிடைக்கும் என ஃபெங் சுய் கூறுகிறது.

அதே போல, சமையலறையில் நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் இருப்பதை உறுதிப்படுத்தவும். இருட்டான இடம் மங்களகரமான இடமாக கருதப்படாது. இருட்டாக இருக்கும் இடத்தில் தீய சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே, சமையலறை வெளிச்சமாக இருக்க வேண்டியது முக்கியம்.

​அதிர்ஷ்ட வண்ணங்களை பயன்படுத்தவும்

சமையலறை சுவர்களில் அதிர்ஷ்ட வண்ணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் உற்சாகத்தை அதிகரிக்கலாம். ஃபெங் சுய் கொள்கைப்படி, மஞ்சள் நிறம் சமையலறைக்கு சிறந்தது. எனவே, நீங்கள் விரும்பியபடி மஞ்சள் நிறத்தின் வெவ்வேறு நிழல்களைச் சேர்க்கலாம்.

அதேபோல, சமையலறையில் எலக்ட்ரானிக் கேஜெட்களின் பயன்பாட்டை முடித்த அளவு குறைக்கவும். சமையறையை முடிந்தவரை எளிமையாக வைத்திருக்கவும். இது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கு நல்ல ஆற்றலை தருவதுடன் உடல் ஆரோக்கியத்தையும் தரும்.

​துர்நாற்றம் வீசும் பொருட்களை அகற்றவும்

சமையலறையில், பிரஷான பூக்கள் அல்லது செடிகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை வைக்கவும். அழுகிய துர்நாற்றம் வீசும் பொருட்களை வெளியே எறியுங்கள். ஒவ்வொரு நாளும் குப்பைத் தொட்டியை சுத்தம் செய்யவும். குப்பைத்தொட்டி நிரம்பி வழியும் வரை அப்படியே வைத்திருக்க வேண்டாம்.

உங்கள் குளிர்சாதன பெட்டி, அலமாரிகள் மற்றும் கபோர்டுகளை சுத்தமாக வைத்திருங்கள். நீங்கள் அரிதாக பயன்படுத்தும் பொருட்களை அலமாரியில் வைக்கவும்; உங்களுக்குத் தேவைப்படும் போது மட்டுமே அவற்றை வெளியே எடுக்கவும். இது நிறைய இடத்தை மிச்சப்படுத்துகிறது மற்றும் நீங்கள் ஒரு மலர் குவளை வைக்க இந்த இடத்தை பயன்படுத்தலாம்.

​கூர்மையான பொருட்களை தவிர்க்கவும்

வீட்டில் நேர்மறையான ஆற்றலை ஏற்படுத்த, காயங்களை ஏற்படுத்தும் கூர்மையான பொருட்கள் மற்றும் கத்தி ஆகியவற்றை தவிர்க்கவும். அவற்றை ஒரு டிராயரில் பாதுகாப்பாக வைக்கவும். உங்கள் பாதுகாப்பை முடிந்தவரை கவனித்துக் கொள்ளுங்கள். கத்திகள் அல்லது கூர்மையான பொருட்களை தொங்கவிடாதீர்கள். அது தீய ஆற்றலை கொடுக்கும்.

எல்லா சமையலறையிலும் அடுப்பு மிகவும் முக்கியமானவை. எனவே, உங்கள் அடுப்பை சுத்தமாக வைத்திருப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் சமைக்கும் போது உங்கள் முதுகு கதவை நோக்கி இல்லாத வகையில் இருக்க வேண்டும். ஒருவேளை உங்கள் சமையலறை அதே போல இருந்தால், பின்னால் கண்ணாடி போன்ற சில பிரதிபலிப்பு உறுப்புகளை வைக்க வேண்டும்.

​இதை ஒருபோதும் செய்யாதீர்கள்

சமையலறையில் உடைந்த அல்லது இயங்காத பொருட்களை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். இத்தகைய பொருட்கள் எதிர்மறையான, அழுத்தமான ஆற்றலை வீட்டிற்குள் வெளியிடுகின்றன மற்றும் நிதி ஆதாயத்திற்கு தடைகளை உருவாக்குகின்றன. பணத்தை வீணாக்காமல் இருக்க, கசியும் குழாயை சரிசெய்ய மறக்காதீர்கள்.

உங்கள் சமையலறை உங்கள் வீட்டின் மையத்தில் இருக்கக்கூடாது. இது அஜீரணம், நிதி இழப்பு மற்றும் பிற உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. அப்படி இருந்தும் உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால், இந்த பிரச்சனைக்கு தீர்வாக, கூரையின் நடுவில் பித்தளை விண்ட் சைமை தொங்கவிட வேண்டும்.

Latest Videos