Friday, January 24, 2025
HomeLatest Newsரணில் பிரதமரானால் 48 மணி நேரத்திற்குள் அனைத்து வரிசைகளும் முடிவு கட்டப்படும்!

ரணில் பிரதமரானால் 48 மணி நேரத்திற்குள் அனைத்து வரிசைகளும் முடிவு கட்டப்படும்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற ஆசனம் பிரதமர் ஆசனமாக மாறலாம் என கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தனது கட்சித் தலைவர் நாட்டைக் கைப்பற்றினால், 48 மணி நேரத்திற்குள் அனைத்து வரிசைகளும் முடிவு கட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தற்போதைய ஆட்சியின் மீதான சர்வதேச நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளதாகவும், சர்வதேச சமூகம் நம்பக்கூடிய ஆட்சி இலங்கையில் நிறுவப்பட்டதும் சர்வதேச சமூகம் உதவும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கும் அளவுக்கு தமது கட்சியில் எவருக்கும் மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக தாம் நினைக்கவில்லை என அமைச்சர் ரோஹித அபேவர்தன குணவர்தன ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Recent News