Thursday, January 23, 2025
HomeLatest Newsரச்சிதா நின்றால் ரொபேர்ட் மாஸ்டருக்கு கால் வலிக்குதாம்.. என்ன பண்ணி இருக்கார் என்று பாருங்க..!

ரச்சிதா நின்றால் ரொபேர்ட் மாஸ்டருக்கு கால் வலிக்குதாம்.. என்ன பண்ணி இருக்கார் என்று பாருங்க..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிகளவு ரசிகர்களைக் கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது ‘பிக்பாஸ்’ தான். இந்த நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் இதன் 6 ஆவது சீசனானது தற்போது ஆரம்பமாகி விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. பரபரப்பிற்கு பஞ்சமில்லாத இந்த சீசனானது கிட்டத்தட்ட 3 வாரங்களை நிறைவு செய்ய இருக்கின்றது.

இந்நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் சாந்தி, ஜிபி முத்து ஆகியோர் இந்தப் போட்டியிலிருந்து வெளியேறி விட்டார்கள். மீதமாக இருப்பது 19 பேர் மட்டுமே. இவர்களுக்கு இடையில் சண்டை, கோபம், அழுகை என அனைத்து விதமான உணர்ச்சிகளும் நாளுக்கு நாள் வெளிப்பட்ட வண்ணம் தான் இருக்கின்றது.

அதேபோன்று மறுபுறம் காதல் லீலைகளும், ரொமாண்டிக் பார்வைகளும் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. அதாவது ஒரு புறம் அசல் நிவாஷினி ஜோடியின் அலப்பறைகளும், மறுபுறம் ரொபேர்ட் மாஸ்டர் ரச்சிதாவின் காதல் பார்வைகளும் நீண்ட வண்ணம் தான் இருக்கின்றன.

அந்தவகையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது விக்ரமன், சிவின், ரச்சிதா ஆகியோர் ஒரு இடத்தில் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அதில் ரச்சிதா நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றார். 

உடனே ரொபேர்ட் மாஸ்டர் அவருக்கு இருக்கை எடுத்து வந்து கொடுக்கின்றார். இதனைப் பார்த்த சிவின் ரொபேர்ட் மாஸ்ருடன் விளையாட்டாக வாக்கு வாதத்தில் ஈடுபடுகின்றார். 

Recent News