Monday, December 23, 2024
HomeLatest Newsஅரிசி மாவு மட்டும் இருந்தால் போதுமே! பேரழகியாய் ஜொலிக்கலாம்

அரிசி மாவு மட்டும் இருந்தால் போதுமே! பேரழகியாய் ஜொலிக்கலாம்

முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும்.

நாங்கள் அன்றாடம் எமது வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு எமது சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளமுடியும். அதில் ஒன்றுதான் அரிசிமா.

அரிசிமாவை ஒரு சில பொருட்களுடன் கலந்து பயன்படுத்தும் போது உங்களது முகம் மிகவும் அழகாக மாறும்.

அரிசிமா ஃபேஸ் பேக்கின் நன்மைகள்

அரிசிமாவை முகத்திற்கு பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் எண்ணெய் தன்மை நீங்கும்.

முகத்தில் இருக்கும் கிருமிகளை அழித்து முகத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

அரிசிமாவில் விட்டமின் டீ இருப்பதால் முகம் புத்துணர்ச்சியாகவும் இளமையாகவும் இருக்கும். சுருக்கங்களும் இல்லாமல் போகும்.

மேலும் சூரிய கதிர்களிடம் இருந்து முகத்தைப் பாதுகாக்கும். அரிசி மா ஃபேஸ் பேக் பயன்படுத்துவதுடன் எவ்வித பக்கவிளைவுகளும் இருக்காது.

அரிசி மா ஃபேஸ் பேக் தயாரிக்கும் முறை

  • அரிசி மா – தேவையான அளவு
  • ரோஸ் வாட்டர் – 1தேக்கரண்டி
  • விளக்கெண்ணெய்- 1/2 தேக்கரண்டி

அனைத்தையும் நன்றாக கலந்து முகத்தில் பூசி கொள்ள வேண்டும். 15-20 நிமிடம் நன்றாக உலர வைக்கவும். பிறகு சுடுநீர் அல்லது சாதாரண நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவதால் முகம் பொலிவாக மாறும். வாரத்தில் 3 அல்லது 4 தடவைகள் நீங்கள் பயன்படுத்தலாம்.

Recent News