Wednesday, December 25, 2024

எரிபொருள் விலை குறைந்தால் உணவுப் பொருட்களின் விலையும் குறையும்!

எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால், உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலை 20% குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான உணவகங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறியுள்ளார்.

எரிவாயு விநியோகமும் உரியமுறையில் விநியோகிக்கப்படும் நிலையில் உணவகங்களை மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Latest Videos