Thursday, December 26, 2024
HomeLatest Newsடலஸ் ஜனாதிபதியானால் சஜித் பிரதமர்! – மொட்டு ஆதரவு

டலஸ் ஜனாதிபதியானால் சஜித் பிரதமர்! – மொட்டு ஆதரவு

சஜித்பிரேமதாசவை பிரதமராக ஏற்றுக்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தயார் என கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகளை இணைத்து முக்கிய பிரச்சினைகளிற்கு தீர்வைக் காணவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமராக நியமிக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

உடன்படிக்கையின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படும் என மத்தும பண்டார தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு போதுமான ஆதரவு உள்ளது.

அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால், சர்வகட்சி ஆட்சி அமைக்கப்படும் என்றும் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

Recent News