உலகளாவிய அமைதி குறியீட்டின் அடிப்படையில், இந்த ஆண்டு ஐஸ்லாந்து உலகின் மிகவும் அமைதியான நாடக தரவரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நாடு, தொடர்ந்தும் 15 ஆவது முறையாக உலகின் மிகவும் அமைதியான நாடு என்ற இடத்தினை தக்கவைத்துள்ளது.
அத்துடன், சிங்கப்பூர், போர்த்துக்கல், ஸ்லோவனியா, ஜப்பான் மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளும் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன.
இதன் பொழுது முன்னதாக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த கனடா,செக் குடியரசு, பின்லாந்து மற்றும் குரோஷியா ஆகிய நாடுகள் இந்த ஆண்டு பட்டியலில் குறைந்த இடத்தை பிடித்துள்ளன.
உலகளவில் ஐரோப்பா மிகவும் அமைதியான பகுதி என்று கூறப்படுகின்றது.
அதே வேளை, ஆப்கானிஸ்தான் உலகின் மிகவும் ஆபத்தான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.