Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஅனைத்து பணய கைதிகளும் விடுதலையாகும் வரை இந்த டாலரை அணிந்திருப்பேன் -  எலான் மஸ்க் நெகிழ்ச்சி..!

அனைத்து பணய கைதிகளும் விடுதலையாகும் வரை இந்த டாலரை அணிந்திருப்பேன் –  எலான் மஸ்க் நெகிழ்ச்சி..!

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் (எக்ஸ்) நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் இஸ்ரேல் சென்றுள்ளார். அவர் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கை சந்தித்தார். அதேபோல், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை
சந்தித்த எலான் மஸ்க் ஹமாஸ் ஆயுதக்குழுவால் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.

இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் பணய கைதிகளாக கடத்தி செல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் குடும்பத்தினரை சந்தித்து எலான் மஸ்க் ஆறுதல் கூறினார்.

அப்போது, பணய கைதிகளின் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் எலான் மஸ்க்கிற்கு
 எங்கள் மனம் காசாவில் உள்ள பணய கைதிகளை நினைத்துக்கொண்டுள்ளது என எழுதப்பட்டிருந்த ‘டாலர்’ ஒன்றை கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட எலான் மஸ்க் தனது கழுத்தில் அணிந்துகொண்டார்.

பின்னர் கூறிய மஸ்க், காசாவில் இருந்து அனைத்து பணய கைதிகளும் விடுதலை செய்யப்படும் வரை நான் இந்த டாலரை அணிந்திருப்பேன்’ என்றார்.

Recent News